Dr.A.Akilambal
MBBS., DGO D.LAP., DRM., MRM., FELLOWSHIP IN COSMETIC GYNECOLOGY
TESTIMONIALS
“வணக்கம் எனது பெயர் கன்னியம்மாள். எனக்கு கடந்த 12 ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. பல்வேறு இடங்களில் நடந்த மருத்துவ சோதனையில் கருப்பை வளர்ச்சி இல்லாத காரணத்தினால் குழந்தை பிறப்பு சாத்தியம் இல்லை என்று கூறி மிகுந்த கவலையில் இருந்தேன். நவீன சிகிக்சை மற்றும் டெஸ்ட் டியூப் பேபி முறையில் குழந்தை பெற்று கொள்ளலாம் என்பதை அறிந்து, கடந்த ஆண்டு வாழப்பாடி தீபம் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்தேன். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. Dr.அகிலாம்பாள் அவர்களுக்கு எங்களின் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.”
“எனது பெயர் வெண்ணிலா. எனது கணவர் பெயர் காமராஜ். எங்களுக்கு திருமணமாகி 6 வருடங்களாகியும் குழந்தை இல்லை. தீபம் மருத்துவமனையில் சில மாதங்கள் சிகிச்சை பெற்ற பின்னர் எங்களுக்கு குழந்தை பிறந்தது. இங்கு மிகவும் அன்பாக கவனித்து கொண்டார்கள். நான் பலருக்கு இங்கு சிகிச்சை எடுக்க பரிந்துரை செய்கிறேன். தீபம் மருத்துவமனைக்கு நன்றி! .”
“எனது பெயர் தையல்நாயகி. நாங்கள் தொடாவூரில் வசித்து வருகிறோம். எங்களுக்கு 3 வருடங்களாக குழந்தை இல்லை. முகாம் மூலமாக தீபம் மருத்துவமனைக்கு வந்தோம். இங்கு சில மாத சிகிச்சைக்கு பின்னர் எங்களுக்கு குழந்தை பிறந்தது. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். தீபம மருத்துவமனைக்கு எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.”
“எனது பெயர் அரசு. எனது மனைவி பெயர் சுசிலா. எங்களுக்கு திருமணம் ஆகி 20 வருடங்களாக குழந்தை இல்லை. தீபம் மருத்துவமனையில் ஒரு வருட சிகிச்சைக்கு பின்னர் எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இங்கு எங்களை அன்பாக கவனித்தார்கள். மற்ற மருத்துவமனைகளில் பணம் அதிகமாக செலவானது. ஆனால் எந்த பலனும் இல்லை. தீபம் மருத்துவமனையில் எங்களுக்கு நல்ல பலன் கிடைத்தது. தீபம் மருத்துவமனையை நாங்கள் மற்றவர்களுக்கும் பரிந்துரை செய்கிறோம். தீபம் மருத்துவமனைக்கும் மருத்துவர்களுக்கும் நன்றி!.”
“எனது பெயர் ஸ்ரீனிவாசன். எனது மனைவி பெயர் சுமதி. எங்களுக்கு திருமணமாகி 4 வருடங்களாக குழந்தை இல்லை. தீபம் மருத்துவமனையில் 2 வருடம் சிகிச்சை எடுத்தோம். இப்போது எங்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை (கோபிகாஸ்ரீ) பிறந்தது. சிகிச்சையின் போது எங்களை அன்பாக கவனித்து கொண்டனர். மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தோம். தீபம் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள மற்றவர்களுக்கும் பரிந்துரைக்கிறோம். தீபம் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களை நாங்கள் கடவுள் போல எண்ணுகிறோம். அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.”
“எனது பெயர் சாந்தி. எனக்கு திருமணமாகி 10 வருடங்களாக குழந்தை இல்லை. தீபம் மருத்துவமனையில் ஆறு மாதம் சிகிச்சை பெற்ற பின் எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை (திலகன்) பிறந்தது. இங்கு மிகவும் அன்பாக கவனித்து கொண்டார்கள். நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். குழந்தை இல்லாத காரணத்தால் எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. போகாத கோவில்கள் இல்லை. பார்க்காத மருத்துவமனைகள் இல்லை. தீபம் மருத்துவமனைக்கு வந்த பின்னரே எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது. இப்போது எங்களுக்கு மகிழ்ச்சியின் அளவிற்கு எல்லையே இல்லை. இந்த மகிழ்ச்சியை கொடுத்த தீபம் மருத்துவமனைக்கும் மருத்துவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவிக்க கடமைபட்டிருக்கிறோம்.”
“எனது பெயர் சப்னா. எனது கணவர் பெயர் அப்துல்லா. எங்களுக்கு திருமணம் ஆகி ஆறு வருடங்களாக குழந்தை இல்லை. தீபம் மருத்துவமனையில் சில மாதங்கள் சிகிச்சை பெற்றபின் எங்களுக்கு குழந்தை பிறந்தது. பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பயனளிக்கவில்லை. தீபம் மருத்துவமனையில் லேப்ராஸ் ஸ்கோப்பி அறுவை சிகிச்சை செய்ததால் குழந்தை உண்டாகும் என்று கூறினர். அதேபோல் எங்களுக்கு குழந்தை பிறந்த மருத்துவமனையையும் மருத்துவர்களையும் எங்களால் மறக்க முடியாது. முதல் குழந்தை பிறந்த ராசி இரண்டாவது குழந்தையும் எவ்வித இடையூறுமின்றி பிறந்தது. பிறரும் இந்த மருத்துவமனை செல்ல பரிந்துரைகிறோம். God is great போல Madam is great.”
“எனது பெயர் ராதிகா. எனது கணவர் பெயர் வெங்கடேஷ் எங்களுக்கு திருமணமாகி 7 வருடங்களாக குழந்தை இல்லை. தீபம் மருத்துவமனையில் சில மாதங்கள் சிகிச்சை எடுத்த பின் எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை (லோகு) பிறந்தது. எந்த மருத்துவமனையிலும் இல்லாத மன நிறைவு எங்களுக்கு இங்கு கிடைத்தது. தீபம் மருத்துவமனை கைராசியான மருத்துவமனை. சிகிச்சைக்கு ஆகும் செலவு குறைவாக உள்ளது. இங்கு மிகவும் அன்பாக கவனித்து கொண்டார்கள். தீபம் மருத்துவமனையின் மருத்துவர்களை கடவுளுக்கு மேலாக மதிக்கிறோம். மற்றவர்களுக்கும் இந்த சிகிச்சையை செய்ய பரிந்துரை செய்கிறோம்!”
“எனது பெயர் பொன்னுசாமி. எங்களுக்கு 30 வருடங்களாக குழந்தை இல்லை. தீபம் மருத்துவமனையில் 3 மாதங்கள் சிகிச்சை எடுத்த பின்னர் எங்களுக்கு குழந்தை பிறந்தது. நாங்கள் இதற்கு முன்னர் சேலம், நாமக்கல், ஈரோடு, ஆத்தூர் மற்றும் பல இடங்களில் சிகிச்சை எடுத்தோம். ஆனால் எந்த பலனும் இல்லை. அதனால் தீபம் மருத்துவமனையில் சோதனை குழாய் மூலம் குழந்தை பெறலாம் என வந்தோம். ஆனால் இங்கு மருத்துவர்கள் அது தேவை இல்லை மாத்திரை மூலமாகவே சரி செய்து விடலாம் என்று கூறினார். அதேபோல 3 மாதங்கள் மாத்திரை உட்கொண்டபின் எங்களுக்கு குழந்தை உண்டானது. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். பிறரும் இங்கு சென்று சிகிச்சை பெற பரிந்துரை செய்கிறோம்.”
“எங்களுக்கு திருமணமாகி 3 வருடங்களாக குழந்தை இல்லை. முதலில் மூன்று மாதம் கர்ப்பம் கலைந்துவிட்டது. பிறகு சகோதரி பரிந்துரையின் பேரில் தீபம் மருத்துவமனைக்கு வந்தோம். இங்கு சில மாத சிகிச்சைக்கு பின் எங்களுக்கு குழந்தை பிறந்தது. இதனை எங்களால் மறக்கவே முடியாது. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இங்கு மிக சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. எங்கள் வாழ்க்கையை திருப்பித்தந்த மருத்துவர்களுக்கு எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்..”
“என் பெயர் சிங்காரவேல். எனது மனைவி பெயர் பச்சியம்மாள். எங்களுக்கு திருமணமாகி 10 வருடங்களாக குழந்தை இல்லை. தீபம் மருத்துவமனையில் சில மாதங்களாக சிகிச்சை எடுத்தோம். இப்போது எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை(சக்திவேல்) பிறந்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் பயனளிக்கவில்லை. ஆனால் தீபம் மருத்துவமனையில் சில மாதங்கள் சிகிச்சை பெற்றபின் எங்களுக்கு குழந்தை பிறந்தது. தீபம் மருத்துவமனை மருத்துவர்கள் எங்களுக்கு கடவுள் மாதிரி!.”
“எனது பெயர் பாப்பாத்தி எனது கணவர் பெயர் பரமசிவம். எங்களுக்கு திருமணமாகி 8 வருடங்களாக குழந்தை இல்லை. தீபம் மருத்துவமனையில் சில மாதங்கள் சிகிச்சைக்கு பின் எங்களுக்கு குழந்தை பிறந்தது. இங்கு மிகவும் நன்றாக சிகிச்சை அளிக்கிறார்கள். தீபம் மருத்துவமனைக்கு எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்!”
“என் பெயர் மல்லிகா நாங்கள் தொடாவூரில் வசித்து வருகிறோம். எங்களுக்கு திருமணமாகி 3 வருடங்களாக குழந்தை இல்லை. தீபம் மருத்துவமனையில் ஆறு மாத சிகிச்சை பெற்றபின் எங்களுக்கு குழந்தை பிறந்தது. எனக்கு சதை வளர்ச்சி இருந்ததால் கரு கலைந்து போனது. பின்னர் அறுவை சிகிச்சை செய்து குழந்தை உண்டானது. பல கோவில்களுக்கு சென்று வந்தோம். ஆனால் எந்த பலனும் இல்லை. ஆனால் தீபம் என்ற கோவிலில் உள்ள தெய்வங்களே எங்களுக்கு குழந்தை வரத்தை தந்தனர்.”
“எனது பெயர் கலையரசி. எனது கணவர் பெயர் முத்துசங்கு. எங்களுக்கு திருமணமாகி 7 வருடங்களாக குழந்தை இல்லை. தீபம் மருத்துவமனையில் சில மாத சிகிச்சைக்கு பின்னர் எங்களுக்கு குழந்தை பிறந்தது. எனக்கு நீர் கட்டி இருப்பதாகவும் அறுவை சிகிச்சை செய்தால் குழந்தை உண்டாகும் எனவும் கூறினர். அதேபோல் அறுவை சிகிச்சைக்கு பின்னர் குழந்தை பிறந்தது. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். தீபம் மருத்துவமனையின் மருத்துவர்களை இரு கரம் கூப்பி வணங்குகிறோம்..”
“எனது பெயர் அன்னக்கிளி எங்களுக்கு திருமணமாகி சில வருடங்களாக குழந்தை இல்லை. தீபம் மருத்துவமனையில் ஒரு மாத சிகிச்சைக்கு பின் எங்களுக்கு அழகிய குழந்தை பிறந்தது. எனக்கு கர்ப்பப்பையில் கட்டி இருப்பதாகவும் அதனால் தான் குழந்தை இல்லை என மற்ற மருத்துவமனைகளில் தெரிவித்தனர். எனது கணவருக்கு இரண்டாவது திருமணம் செய்யவும் முடிவு செய்தனர். தீபம் மருத்துவமனைக்கு செல்ல என்னை ஒருவர் பரிந்துரைத்தார். இங்கு வந்த பிறகு எங்களுக்கு குழந்தையும் பிறந்தது என்னுடைய வாழ்க்கையும் காப்பற்றப்பட்டது. தீபம் மருத்துவமனைக்கு நான் மிகவும் கடமைப்பட்டுளேன்.”
“எனது பெயர் சித்ரா எங்களுக்கு திருமணமாகி 10 வருடங்களாக குழந்தை இல்லை. தீபம் மருத்துவமனையின் 3 மாதங்கள் சிகிச்சை எடுத்தபின் எங்களுக்கு குழந்தை பிறந்தது. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். தீபம் மருத்துவமனையின் மருத்துவர்கள் தெய்வத்திற்கு சமம்! ”
“எனது பெயர் கலையரசி. எனது கணவர் பெயர் மூர்த்தி எங்களுக்கு திருமணம் ஆகி 2 வருடங்களாக குழந்தை இல்லை. தீபம் மருத்துவமனையில் 1 மாத சிகிச்சைக்கு பின்னர் எங்களுக்கு குழந்தை பிறந்தது. எனக்கு கருமுட்டை வளர்ச்சி இல்லை என மற்ற மருத்துவர்கள் கூறினர். இங்கு எனக்கு சிகிச்சை அளித்து எனக்கு குழந்தை பாக்கியத்தை தந்தனர். நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். தீபம் மருத்துவமனையின் மருத்துவர்கள் எங்களுக்கு கடவுள் போல. கடவுளை நேரில் பார்த்த மகிழ்ச்சியை எங்களால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. தீபம் மருத்துவமனையின் மருத்துவர்கள் வாழ்க!”